close
Choose your channels

'அழகிய சிங்கர்' : 'இந்த புகைப்படத்தை எடுத்தது உங்கள் கமல்ஹாசன்..!

Wednesday, March 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் தான் எடுத்த சிங்கத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகின் பொக்கிஷம் என்று கூறப்படும் உலகநாயகன் கமல்ஹாசன், இளைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக தற்போது பிஸியான நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் என்பது தெரிந்தது.

‘இந்தியன் 2’ ‘இந்தியன் 3’ ’தக்ஃலைப்’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர் ’எஸ்.டி.ஆர் 48’, ‘எஸ்கே 21’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் அவர் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பதும் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் பதிவுகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி இன்னொரு பக்கம் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதும் விரைவில் அவர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்திலும் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு சிங்கம் தண்ணீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை எடுத்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சிங்கத்தை கூட மரியாதையாக அவர் ’அழகிய சிங்கர்’ என்று கேப்ஷன் ஆக பதிவு செய்துள்ள நிலையில் ’இந்த புகைப்படத்தை எடுத்தது உங்கள் கமல்ஹாசன்’ என்பது உள்பட ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment