கமல்ஹாசன்: பிக்பாஸ் 1க்கு பின் அரசியல், பிக்பாஸ் 2க்கு பின் ஆட்சியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடித்து மிகபெரிய பெயரையும் புகழையும் பெற்றிருந்தாலும், குடும்ப பெண்கள் உள்பட அனைவரையும் அவரை பிடிக்க ஒரு முக்கிய 'பிக்பாஸ் நிகழ்ச்சி. சீரியல்களை கூட மறந்துவிட்டு பெண்கள் ஒரு நாள் கூட விடாமல் தொடர்ந்து பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் கமல் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட இந்த நிகழ்ச்சி ஒரு முக்கிய காரணம். கமல்ஹாசனின் கட்சி இன்று பொதுமக்களிடம் எளிதில் போய் சேர்வதற்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு காரணமாக கூறலாம்
இந்த நிலையில் பிக்பாஸ் 2 விரைவில் தொடங்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இந்த முறை இந்த நிகழ்ச்சியை நடத்துவது சூர்யா அல்லது அரவிந்தசாமியாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி கமல்ஹாசனே மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வரும் மே மாதம் இந்த நிகழ்ச்சியின் புரமோஷன் தொடங்கப்பட்டு, ஜூன் மாதம் முதல் மீண்டும் உலகநாயகரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் பார்க்கலாம். பிக்பாஸ்1, கமல்ஹாசனை அரசியலுக்கு கொண்டு வந்தது, பிக்பாஸ் 2 அவரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இந்த நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் மீண்டும் தொகுத்து வழங்கப்போகிறார் என்பதை நாம் கடந்த மாதமே குறிப்பிட்டிருந்தோம் என்பதும் அது தற்போது உண்மையாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. (https://www.indiaglitz.com/biggboss-tamil-season-2-host-by-kamal-hassan-tamil-news-207630)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments