கடவுள் பாதி மிருகம் பாதி: 20 வருடத்திற்கு முன்பே அசத்திய கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' பாடல்..!

  • IndiaGlitz, [Saturday,November 18 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘ஆளவந்தான்’ திரைப்படம் தற்போது டிஜிட்டல் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் டிசம்பர் 8ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’கடவுள் பாதி மிருகம் பாதி’ என்ற பாடல் இன்று வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்திருந்தார்.

அதன்படி சற்றுமுன் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை பார்த்து பலர் 20 வருடங்களுக்கு முன் இந்த படத்தை பார்த்த மலரும் நினைவுகள் ஞாபகத்துக்கு வருகிறது என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

கமல்ஹாசனின் ’வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் சமீபத்தில் மீண்டும் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது போல் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.