ஆயிரம் சூரியன் போல வந்தான்.. 'ஆளவந்தான்' பாடலின் மாஸ் வீடியோ ரிலீஸ்..

  • IndiaGlitz, [Saturday,November 25 2023]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ என்ற திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 22 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸாகவுள்ளது.

வரும் டிசம்பர் 8ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’கடவுள் பாதி மிருகம் பாதி’ என்ற பாடல் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலான ஆளவந்தான் என்ற பாடலின் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசன் கதை, திரைக்கதை வசனம் எழுதிய இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் அன்றைய தினம் கொண்டாடப்படவில்லை என்றாலும் தற்போது இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வெளியான பாடலின் வரிகள் இதோ:


ஆளவந்தான்..
ஐம்பெருங்கண்டங்கள் ஆளவந்தான்
ஆயிரம் சூரியன் போல வந்தான்

வாழ்க்கையை முழுமையாய் வாழ வந்தான்
அரசாண்ட பாண்டியன் மீள வந்தான்

சூள் கொண்ட படையொன்று சூழ வந்தான்
நீல வான் எல்லை வரை நீள வந்தான்
மூச்சினில் தீக்கணல் மூல வந்தான்
மானுட வகையெல்லாம் ஆளவந்தான்
அர்ள் கொண்ட மேகமாய் தாழ வந்தான்
ஆயிரம் சூரியன் போல வந்தான்
ஆளவந்தான்..
ஆளவந்தான்.