1000 திரையரங்குகளில் 'ஆளவந்தான்': கலைப்புலி எஸ் தாணு அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கமலஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ திரைப்படம் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அறிவித்துள்ளார்.
கமலஹாசன் நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ‘ஆளவந்தான்’ திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்தது என்பதும் இந்த படம் பிரமாண்டமாக இருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் இன்றளவும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் நீளத்தை குறைத்து, டிஜிட்டல் முறையில் உருவாகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அறிவித்துள்ளார். விரைவில் 1000 திரையரங்குகளில் அகிலமெங்கும் ‘ஆளவந்தான்’ திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அவர் அறிவித்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
இரு வேடங்களில் கமல்ஹாசன், ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா, சரத் பாபு, அனுஹாசன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு சங்கர் ஈசான் லாய் என்பவர் இசையமைத்துள்ளார். புதிய டிஜிட்டல் வடிவில் வெளியாக இருக்கும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெரும் என்று கூறப்படுகிறது.
விரைவில்
— Kalaippuli S Thanu (@theVcreations) January 25, 2023
திரையரங்கில்
உங்கள்
உள்ளங்களை
ஆள வருகிறான்! #Aalavandhan @Suresh_Krissna pic.twitter.com/xj4dWqc5sF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments