நாளை பிறந்தநாள் கொண்டாட்டம்: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் முக்கிய வேண்டுகோள்

  • IndiaGlitz, [Wednesday,November 06 2019]

உலக நாயகன் கமல்ஹாசனின் இந்த ஆண்டு பிறந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்த பிறந்த நாள் ஆகும். இந்த ஆண்டுடன் அவர் திரையுலகில் அறிமுகமாகி 60 வருடங்கள் நிறைவு செய்வதால் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தோடு, 60ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டமும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் இதில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களான ரஜினிகாந்த், இளையராஜா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாடும் ரசிகர்களுக்கும், தனது கட்சியின் ரசிகர்களுக்கும் கமல்ஹாசன் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நவம்பர் 7ஆம் தேதி எனது பிறந்த நாள்‌ அன்று, பரமக்குடியில்‌ எனது தந்தையார்‌ அய்யா சீனிவாசன்‌ அவர்களின்‌ திருவுருவச்சிலையினைத்‌ திறக்கவுள்ளோம்‌ என்பதை தாங்கள்‌ அனைவரும்‌ அறிவீர்கள்‌. அப்பொழுது என்னை வரவேற்க வருகின்ற நண்பர்கள்‌, தொண்டர்கள்‌ மற்றும்‌ ரசிகப்பெருமக்கள்‌ எவ்விதத்திலும்‌ பொதுமக்களுக்கு. ஊறு விளைவிக்கக்கூடிய வகையில்‌ பேனர்கள்‌, ஃப்ளெக்ஸ்‌ மற்றும்‌ கொடிகள்‌ போன்றவற்றை கட்டாயம்‌ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்‌.

இவ்விசயத்தில்‌ எவ்வித காரணங்களும்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, எந்நிலையிலும்‌ சமரசங்கள்‌ செய்து கொள்ளப்பட மாட்டாது என்பதை மிகவும்‌ கண்டிப்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்‌. இனி நிகழவிருக்கும்‌ அரசியல்‌ மற்றும்‌ ஆட்சி முறைகளில்‌, மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி கொண்டு வரவிருக்கும்‌ மாற்றங்களை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும்‌ என்பது எனது விருப்பம்‌.

இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

'விக்ரம் 58' படத்தின் அடுத்த அப்டேட்டை அளித்த கிரிக்கெட் வீரர்

விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில்,

சிம்புவின் 'மாநாடு'க்கு மீண்டும் பச்சைக்கொடி: ஐயப்பன் அருளா?

சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'மாநாடு' என்ற படம் தொடங்கப்பட்டது.

பரவை முனியம்மா உடல்நிலை குறித்து அப்டேட் தந்த தமிழ் நடிகர்

விக்ரம் நடித்த 'தூள்' படத்தில் இடம்பெற்ற 'சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...' என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான பரவை முனியம்மா

கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த மூன்று பிரபலங்கள் 

உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'மக்கள் நீதி மையம்' என்ற கட்சியை தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அக்கட்சி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற

முன்னணி நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுவரும் நிறுவனம் என்பது தெரிந்த்தே.