என் வீட்டை மருத்துவ மய்யமாக்க நினைக்கின்றேன்: கமல்ஹாசன் டுவீட்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை எதிர்த்து மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வரும் நிலையில் பொதுமக்களும் இந்த விஷயத்தில் அரசுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். ஒருசிலர் மட்டுமே இந்த வைரஸின் சீரியஸ் தெரியாமல் வெளியே சுற்றி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் தனது வீட்டை மருத்துவமனைக்கு தர தயாராக இருப்பதாக நடிகரும் மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் கூறியதாவது:

இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்’ என்று பதிவு செய்துள்ளார்.

வழக்கம்போல் கமல்ஹாசனின் இந்த டுவிட்டிற்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்டுக்கல் டுவிட்டர்வாசிகளிடம் இருந்து பதிவாகி வருகிறது.