'ஊக்கமது கைவிடேல்' ஜல்லிக்கட்டு போராளிகளுக்கு கமல் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் ஆரம்பத்தில் இருந்தே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடக்காதபோதே தனது அதிருப்தியை வெளியிட்டவர். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்காதது குறித்து அவ்வப்போது தனத் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த வந்த அவர் தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்' என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் இன்னொரு பதிவில் ஏற்கனவே போதுமான அளவு காயங்களை அடைந்துவிட்டோம். எங்கள் காயங்களுக்கு பேண்ட்-எய்ட் வேண்டாம். காயங்கள் குழு அளவில் குணமாக வேண்டும்' என்று கூறியுள்ளார்.
ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 20, 2017
Bravo. People of Tamilnadu. This agitation is a sample of our discontent. No more band-aids. Heal the wounds. We have been hurt enough. Act
— Kamal Haasan (@ikamalhaasan) January 20, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout