'ஊக்கமது கைவிடேல்' ஜல்லிக்கட்டு போராளிகளுக்கு கமல் வாழ்த்து

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் ஆரம்பத்தில் இருந்தே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடக்காதபோதே தனது அதிருப்தியை வெளியிட்டவர். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்காதது குறித்து அவ்வப்போது தனத் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த வந்த அவர் தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்' என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் இன்னொரு பதிவில் ஏற்கனவே போதுமான அளவு காயங்களை அடைந்துவிட்டோம். எங்கள் காயங்களுக்கு பேண்ட்-எய்ட் வேண்டாம். காயங்கள் குழு அளவில் குணமாக வேண்டும்' என்று கூறியுள்ளார்.

More News

ஜல்லிக்கட்டுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல். வாடிவாசல் திறப்பது எப்போது?

சென்னை மெரீனா, மதுரை அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது...

நடிகர் ராகவா லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் கடந்த நான்கு நாட்களாக மெரீனாவில் நடைபெற்று வரும் மாணவர்களின் ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார். போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்து பொருட்களுக்காக ரூ.1 கோடி கூட செலவு செய்ய தயார் என்று நேற்று அறிவித்திருந்தார்...

இலவச செக்ஸ்ன்னா இதைவிட அதிகமா கூடுவாங்க- ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்திய ராதா ராஜன்

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைமையின்றி, எந்த ஒரு தனிப்பட்ட...

நான் பீட்டா உறுப்பினர் அல்ல. செளந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. எப்படியும் இந்த போராட்டத்தில் வென்றே தீருவது...

சென்னை மெரீனாவில் மாணவர்கள் மத்தியில் ஹீரோவான காவலர்

சென்னை மெரீனாவில் கடந்த நான்கு நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாறு காணாத வகையில் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக நடந்து வருகிறது., இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் எந்தவித வன்முறையும் இதுவரை நடைபெற்றது இல்லை...