கமல்ஹாசனை வீட்டுக்கு அழைத்து விருந்தளித்த பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளதை அடுத்து திரை உலகப் பிரபலம் ஒருவர் கமல்ஹாசனை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’விக்ரம்’. இந்த படம் 250 கோடி வசூலை தாண்டி தற்போது 300 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி அகில இந்திய அளவில் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை பல பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ’விக்ரம்’ படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, கமல்ஹாசனை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்தார். அதுமட்டுமின்றி இந்த விருந்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானும் கலந்து கொண்டார்.
இதுகுறித்து சிரஞ்சீவி கூறியபோது ’எனது அன்பான பழைய நண்பர் கமல்ஹாசனை அழைத்து நேற்று இரவு வீட்டில் விருந்தளித்து கவுரவித்தது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ’விக்ரம்’ படத்தின் அற்புதமான வெற்றிக்கு எனது நெருங்கிய நண்பர் சல்மான்கான் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இந்த விருந்தில் கலந்துகொண்டனர். என்ன ஒரு திரில்லிங்கான படம், எனது நண்பா! மேலும் உங்களுக்கு சக்திகள் கிடைக்க வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Absolute joy,celebrating & honouring my dearest old friend @ikamalhaasan for the spectacular success of #Vikram along with my dearest Sallu Bhai @BeingSalmanKhan @Dir_Lokesh & team at my home last night.What an intense & thrilling film it is!!Kudos My friend!! More Power to you! pic.twitter.com/0ovPFK20r4
— Chiranjeevi Konidela (@KChiruTweets) June 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments