கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? தனியார் மருத்துவமனை தகவல்!
- IndiaGlitz, [Wednesday,December 01 2021]
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக வதந்தி கிளம்பியதை அடுத்து மக்கள் நீதி மய்யம் அதுகுறித்து விளக்கம் அளித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதி குறித்த விவரங்களை சற்றுமுன் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை படிப்படியாக தேறி வருவதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.
இந்த நிலையில் சற்று முன்னர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கடந்த 22ஆம் தேதி கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் அவர்கள் தற்போது முழுவதுமாக குணமாகிவிட்டார். இருப்பினும் அவர் டிசம்பர் 3ஆம் தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளர். கமல்ஹாசன் தனது வழக்கமான பணிகளை டிசம்பர் 4ம் தேதி முதல் தொடங்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து வரும் 4 மற்றும் 5 ஆகிய இரு நாட்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.