உலக நாயகனின் உடல்நிலை குறித்த தகவல்
Saturday, August 20, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த உலக நாயகன் கமல்ஹாசன் ஒருசில வாரங்கள் சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது சிறுசிறு உடற்பயிற்சி செய்து கொண்டு ஓய்வு எடுத்து வரும் அவருடைய உடல்நிலை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
இதுவரை பிறருடைய துணையுடன் எழுந்து நடமாடி வந்த கமல், தற்போது யாருடைய உதவியும் இல்லாமல் நடக்க ஆரம்பித்துவிட்டதாகவும், அவர் சிறிய அளவில் வாக்கிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக ஐம்பது வயதுக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் எழுந்து நடமாடுவது கடினம். ஆனால் மன உறுதியும் தன்னம்பிக்கையும் உடைய கமல், யாருடைய துணையும் இன்றி எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் இயக்கி நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அவர் இன்னும் ஒருசில வாரங்களில் கலந்து கொள்வார் என்றும் பழைய சுறுசுறுப்பான கமல்ஹாசனை விரைவில் காணலாம் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment