இன்னொரு தடவை சொன்னா.. 3 போட்டியாளர்களுக்கு வார்னிங் கொடுத்த கமல்ஹாசன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவு குறையவே இல்லை. முதல் நாளிலிருந்து தற்போது 70 நாளை நெருங்கி விட்டபோதிலும் போட்டியாளர்கள் டாஸ்க் செய்வதை விட சண்டை செய்வதில் தான் அதிக ஆர்வத்தில் உள்ளனர் போல் தெரிகிறது.
ஒருவரை ஒருவர் குறை சொல்வது, வெளியே போய்விட்ட போட்டியாளரை வைத்துக்கொண்டு சண்டை போடுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, ஒருவரையே குறிவைத்து ஒரு கேங் தாக்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த சீசனில் நடந்து வருகின்றது
இந்த நிலையில் மூன்று போட்டியாளர்களை கமல் இன்று எச்சரிக்கிறார். முதலில் மணியிடம் அவர் ’ட்ரூ காலர் கம்மிங் அவுட்’ என்று சொன்னிங்களே அதில் அர்த்தம் என்ன? என்று கேட்கிறார். இதனை அடுத்து தினேஷிடம் ’என்ன பார் தெளததா பேசுறீங்களே’ என்று கேட்டீர்களே, அதற்கு அர்த்தம் என்ன? என்று கேட்டார்
வட சென்னை ஸ்லாங் பற்றி சொல்கிறீர்களா என்று கேட்டதற்கு தினேஷ் ஆமாம் என்று சொன்னார். அப்படி பிராண்ட் குத்ஹ்ட நீங்கள் யார் என்று கேள்வி கேட்ட கமல் உங்கள் ஸ்லாங் மாறியதற்கு உண்மையான காரணம் அதுதான், அவர் சொன்ன ட்ரூ கலரும் அதுதான், இன்னொரு முறை இதுமாதிரி பேசினால் இந்த கார்டின் கலர் மாறும் என்று மஞ்சள் கார்டை நிக்சன், மணி மற்றும் தினேஷ் ஆகிய மூவருக்கும் காண்பிக்கிறார்.
முன்னதாக தினேஷை கமல்ஹாசன் வச்சி செய்தார். ’சொருகிடுவேன்’ என்று சொன்னீர்களே, எங்கே சொருகுவீர்கள்? இங்கேயா அங்கேயா என வயிறு மார்பு கண் ஆகிய இடங்களை ’வேட்டையாடு விளையாடு’ பாணியில் கமல்ஹாசன் காட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு முறை நீங்கள் வன்முறை பேச்சு பேசினால் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்படுவீர்கள் என்றும் நிக்சனுக்கு அவர் வார்னிங் கொடுத்தார்.
மொத்தத்தில் இன்றைய எபிசோடு பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com