close
Choose your channels

'மாமன்னன்' வெற்றியால் வடிவேலுவை அரசியலுக்கு இழுக்கும் கமல்.. ஒப்புக்கொள்வாரா வைகைப்புயல்?

Friday, July 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு ஒரு சீரியசான கேரக்டரில் நடித்த நிலையில் அவருக்கு மேலும் அதே போன்று கேரக்டர்கள் வந்து கொண்டிருப்பதாகவும், இதையடுத்து கமல்ஹாசன், ஒரு அரசியல் கேரக்டரை அவருக்கு பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடித்த ’தேவர் மகன்’ திரைப்படத்தில் வடிவேலுக்கு இசக்கி என்ற குணசித்திர கேரக்டர் ஒன்றை கொடுத்து இருப்பார் என்பதும் அந்த கேரக்டரில் வடிவேலுவும் அசத்தியிருப்பார் என்பது தெரிந்ததே. இசக்கி கேரக்டரை மனதில் வைத்து தான் ’மாமன்னன்’ படத்தின் வடிவேலு கேரக்டரை உருவாக்கியதாக மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ‘தேவர் மகன் படத்திற்கு பின் தொடர்ச்சியாக காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு ’மாமன்னன்’ படத்தில் மீண்டும் குணசித்திர கேரக்டருக்கு மாறியதை எடுத்து அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தன்னிடம் உள்ள அரசியல் கதை ஒன்றில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதில் வடிவேலுக்கு சீரியசான கேரக்டர் என்றும், வடிவேலு இதில் நடிக்க ஒப்புக் கொண்டால் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசன் கொடுத்துள்ள இந்த வாய்ப்பை வடிவேலு பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment