2021 தேர்தல் எதிரொலி: நாசர் மனைவிக்கு புதிய பொறுப்பு கொடுத்த கமல்!

உலக நாயகன் நடிகர் கமலஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சியை தொடங்கியதில் இருந்தே கமலஹாசன் தனக்கு மிகவும் நெருக்கமான நடிகர்களில் ஒருவரான நாசரின் மனைவி கமீலா நாசருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்து வந்தார் என்பது தெரிந்ததே.

மேலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம் கட்ச்யின் வேட்பாளராக போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் கமீலா நாசருக்கு கமல்ஹாசன் சென்னை மண்டலத்தில் மாநில செயலாளர் பதவியை கொடுத்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு சற்றுமுன் மக்கள் நீதி மய்யம் கட்சி யின் அறிக்கையில் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி விவசாய அணி மாநில செயலாளராக மயில்சாமி என்பவரும், கோவை மண்டல மாநில செயலாளராக ரங்கநாதன் என்பவரும், திருநெல்வேலி மண்டல மாநில செயலாளராக டாக்டர் பிரேம்நாத் என்பவரும், விழுப்புரம் மாவட்ட மாநில செயலாளராக ஸ்ரீபதி என்பவரும், தலைமை நிலைய பரப்புரையாளராக காந்தி கண்ணதாசன் என்பவரையும் கமலஹாசன் நியமனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டு மே மாதம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருவதாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.