இயக்குனருக்கு சொகுசுக்கார், உதவி இயக்குனர்களுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை கௌரவப்படுத்தும் வகையில் அவருக்கு லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக வாங்கிக் கொடுத்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த காரின் மதிப்பு சுமார் 75 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனரை அடுத்து இந்தப் படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்களுக்கும் கமல்ஹாசன் தனது அன்பு பரிசை வழங்கி உள்ளார். 'விக்ரம்’ படத்தில் உதவி இயக்குனர்களாகபணிபுரிந்த 13 பேர்களுக்கு பைக்குகளை கமல் பரிசாக வழங்கியுள்ளார்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 என்ற மாடல் பைக்கை கமல்ஹாசன் உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் விலை சுமார் ரூ.78,000 என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இன்னும் இந்த படத்தில் பணிபுரிந்த பிற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கமல்ஹாசன் விரைவில் தனது அன்பு பரிசை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

More News

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்': மாஸ் அப்டேட் கொடுத்த சன்பிக்சர்ஸ்!

தனுஷ் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் மாஸ் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது

'விக்ரம்' வெற்றி எதிரொலி: 'இந்தியன் 2' படத்தை அடுத்து புத்துயிர் பெறும் இன்னொரு படம்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் தான் 'விக்ரம்'. இந்த படம்

'பொன்னியின் செல்வன்' டீசர் சோழர்கள் தலைநகரில் நடைபெறுகிறதா?

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா

அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் ரிலீஸ்: என்ன பட்டம் கொடுத்துருக்காங்க தெரியுமா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்த கன்னட படம் ஒன்றான 'அரபி' என்ற படத்தின் டீசர் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் ஒரு சில தொழில்நுட்ப

'விக்ரம்' குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் பிக்பாஸ் நடிகை: வீடியோ வைரல்

view-source:https://tamil.filmibeat.com/news/bigg-boss-julie-playing-with-vikram-movie-child-artist-video-trending-096355.html