'தக்லைஃப்' படத்தில் கமல்ஹாசனுக்கு இத்தனை கெட்டப்பா? விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,March 21 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் எத்தனை கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

‘நாயகன்’ படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்தது.

கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் துல்கர் சல்மான் ஒரு கேரக்டரில் நடிக்க இருந்தார். ஆனால் அவர் திடீரென விலகி விட்ட நிலையில் அவருக்கு பதில் சிம்பு நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கமல்ஹாசன் இந்த படத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் கசிந்து உள்ளது. மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கமல் ரசிகர்களுக்கு இந்த கெட்டப்புகளை பார்க்கும்போது புதுமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’தசாவதாரம்’ படத்தில் 10 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து விட்ட கமல்ஹாசனுக்கு மூன்று வேடம் என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு ஆச்சரியப்படத்தக்க சில அம்சங்கள் இந்த படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், விரைவில் கமல்ஹாசன் இந்த படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.