மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் முழு உரை:

  • IndiaGlitz, [Wednesday,February 21 2018]

வணக்கம். நான் துவங்கியிருக்கும் நியாயப்போரின் தமிழரின் படை. அதன் போர் முனை, இரண்டம் வரிசையில் அமர்ந்திருக்கின்றது. அவர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்கள் தனித்தனியே பேசினால் ஒவ்வொருவரை பற்றியும் பல நிமிடங்கள் பேசலாம். இவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள், நீங்கள் யார்? என்று கேட்டபோது நன் தயங்காமல் நான் யார், என்றும், என்ன செய்ய போகிறேன் என்றும் சொன்னேன். நாம் யார் என்று புரிந்து கொண்டதால் என்னுடன் இணைந்தனர்

37 வருடங்களாக அமைதியாக நற்பணிகள் செய்து கொண்ட கூட்டத்தின் கூர்முனைகளை பார்த்தீர்கள். அதற்கு பின்னால் எத்தனையோ ஆயிரம், லட்சம் தோழர்களின் ஒரு பகுதிதான் இது. நாங்கள் பல வருடங்கள் நமக்கு எதற்கு இதெல்லாம் என்றுதான் இருந்தோம். இருந்தும் அதற்கு பல இடைஞ்சல்கள் வந்தன. சில அரசுகள் இதை கடமையாக செய்தனர்.

கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும், ஆனால் மறந்தவையாக இருக்காது. நினைவில் வைத்துக்கொண்டிருக்கின்றோம். யாருக்கும் தெரியாமல் நங்கள் தண்டவாளம் போட்டோம். எங்கள் தண்டவளமும், உங்கள் வண்டவாளமும் வெளியகும் நாள் இது

அரவிந்த் கெஜ்ரிவல் இன்றே எனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் அவருக்கு எனது நன்றி. எங்கள் வேகத்தை கூட்டிய கெஜ்ரிவால் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

எத்தனை காலம் இன்னும் இந்த அநீதிகளை பார்த்துக்கொண்டு ஊமையாய் இருபது. இன்று பேசும் நாள், நாளை செயல்படும் நாள்

நேற்று என்னிடம் பேசிய ஆந்திர முதல்வர் செயலை தொடங்குங்கள் என்று கூறினார். மக்கள் நலன் தான் கொள்கை என மனதில் உள்ளதை சந்திரபாபு நாயுடும் பிரதிபலித்தார். அதனால்  நேற்று இரவு நான் நிம்மதியாக தூங்கினேன்.

என மனதில் தோன்றி கருத்துக்களை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துவிட்டார். இந்த கூட்டத்தில் தலைவன் நான் அல்ல, தொண்டன் தான் நான். நீங்கள் தான் என்னை ஆதிக்கம் செலுத்த வேண்டும். தமிழன் என்ற முறையில் நாமே நமக்கு இட்டுக்கொள்ள வேண்டிய உத்தரவு

எனது கட்சியின் கொள்கைகள், எல்லா நல்ல முதலமைசர்களுக்கும் இருக்கும் கொள்கைதான் எனக்கும் உள்ளது. நல்ல தரமான எல்லா தரப்பினர்களுக்கும் கல்வி. சாதிகள் நிறுத்தப்பட வேண்டும், ஊழலை குறைத்தால் தானாக தேவையான அனைத்தும் வரும். உங்களுக்கு வரும் பற்றாக்குறை எல்லாம் பேராசையினால் வந்தது. இவ்வளவு நாள் ஊழலை வேடிக்கை பார்த்து சும்மா இருந்தோம், இனிமேல் அது நடக்காது.

ஓட்டுக்கு நான் பணம் கொடுக்க மாட்டேன், எங்கள் கையில் காசு கிடையாது, இருந்தாலும் கொடுக்க மாட்டேன். உங்களுடைய ஓட்டின் வலிமை தெரியாமல் அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டீர்கள், நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தால் வருடத்திற்கு உங்களுக்கு ரு.6 லட்சம் கிடைத்திருக்கும். ஆனால் நீங்கள் ரூ.6000க்கு ஓட்டை விற்றுவிட்டீர்கள்

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலையே இனி இருக்காது. 8 கிராமத்தை தத்தெடுப்பதை சிலர் கேலி செய்கின்றனர். எங்கள் பணியில் அதிருப்தி இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறோம்.  மக்கள் ஏமாறும் காலம் முடிந்துவிட்டது. அடுத்த கட்டம் தொடங்கிவிட்டது.

காவிரி பிரச்சனைக்கு என்ன பதில் என்று கேட்கின்றார்கள். ஒழுங்காக, முறையாக உரையாடல் நடந்தால், எந்த மாநிலத்தில் இருந்தும் நமக்கு தேவையான விஷயங்களை பேசி பெற முடியும். தண்ணீர் மட்டுமல்ல, என்னால் ரத்தத்தை கூட வாங்கி கொடுக்க முடியும். ரத்தம் என்றால் சண்டை என்று நினைக்க வேண்டாம். ரத்த தானத்தை சொல்கிறேன்.

புதிய தென்னிந்தியாவின் மேப் எங்கள் கட்சியின் கொடியை உற்று நோக்கினால் தெரியும். ஆறு கைகள் ஆறு மாநிலங்கள். நடுவில் இருக்கும் நட்சத்திரங்ம் உங்களை, மக்களை குறிக்கும். மக்களின் நீதியை மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சிதான் மக்கள் நீதி மய்யம் கட்சி

நீதிகக்ட்சியின் நல்ல அறிவுரையை எங்கள் கட்சியில் வைத்துள்ளோம். நங்கள் இடதும், அல்ல வலதும் அல்ல, மய்யமாக இருக்க வேண்டும் என்பதால் கட்சியின் பெயரை மய்யமாக வைத்துள்ளோம். தராசின் நடுமுள் நாம்,. நான் இந்த கூட்டத்தில் நாளைய தலைவரை தேடிக்கொண்டிருக்கின்றேன். அடுத்த தலைமுரைக்கான விதையை போட நான் இங்கு வந்துள்ளோம்

பள்ளியை சிறப்பாக நடத்த வேண்டிய அரசு, தனியாருக்கு கொடுத்து விட்டு யார் வேண்டுமானால் செய்யும் சாராயம் வியாபரத்தை அரசு நடத்துகிறது. வீதிக்கு ஒரு சாராய கடை தேவையா?  கல்வியின் தரம் போதாது. எதையாவது கொடுபபது கல்வி அல்ல. நல்ல கல்வியை நாம் கொடுப்போம்

More News

ஒரே காரில் கமல்-அரவிந்த் கெஜ்ரிவால்: பொதுக்கூட்ட மேடைக்கு புறப்பட்டனர்

கமல்ஹாசன் இன்று காலை தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கிய நிலையில் இன்னும் சற்று நேரத்தில் மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர்

கட்சி கொடியை ஏற்றினார் கமல்: கொடியின் நிறங்கள் என்ன தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் சற்றுமுன்னர் தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றினார்.

இயக்குனர் விஜய் -பிரபுதேவா படத்தின் டைட்டில் அறிவிப்பு

பிரபல இயக்குனர் விஜய், பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்கிய 'தேவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு படத்தில் நடித்து வருகிறார்

அரசியலிலும் உங்கள் சாதனை தொடரட்டும்: கமலுக்கு பிரபல நடிகர் பாராட்டு

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். இன்று மாலை 6 மணிக்கு அவர் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கின்றார்

ப்ரியாவாரியர் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புருவ நடனம் மற்றும் கண் சிமிட்டல் மூலம் ஒருசில நாட்களில் இணைய உலகத்தின் உச்சகட்ட புகழை பெற்றுவிட்ட மலையாள நடிகை பிரியாவாரியருக்கு கண்திருஷ்டி போல் அவர் மீது ஒருசில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன,.