close
Choose your channels

பைலட் அறையில் கமல்.. 22000 அடி உயரத்தில் பறக்கும் மாஸ் புகைப்படம்..!

Monday, April 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விமானத்தின் பைலட் அறையில் கமல் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அந்த விமானம் 22,000 அடி உயரத்தில் பறக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தைவானில் நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் சில புகைப்படங்களை கமல்ஹாசன் வெளியிட்டார் என்பதும் இன்று மதியம் கூட இசை அமைப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 22,000 அடி உயரத்தில் பைலட் அருகில் உட்கார்ந்து விமானத்தில் பறக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்தது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment