பைலட் அறையில் கமல்.. 22000 அடி உயரத்தில் பறக்கும் மாஸ் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,April 10 2023]

விமானத்தின் பைலட் அறையில் கமல் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அந்த விமானம் 22,000 அடி உயரத்தில் பறக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தைவானில் நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் சில புகைப்படங்களை கமல்ஹாசன் வெளியிட்டார் என்பதும் இன்று மதியம் கூட இசை அமைப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 22,000 அடி உயரத்தில் பைலட் அருகில் உட்கார்ந்து விமானத்தில் பறக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்தது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பேயை முதல்ல பார்த்த சாட்சி நீங்க தான்.. மாஸ்டர் மகேந்திரனின் 'ரிப்பப்பரி' டிரைலர்..!

குழந்தை நட்சத்திர முதல் திரைப்படங்களில் நடித்து வரும் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள 'ரிப்பப்பரி' என்ற திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில்

இன்னும் நான் 'லியோ' படத்தில் நடிக்கவே ஆரம்பிக்கலை.. பிரபல நடிகர் பேட்டி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தனது காட்சியின் படப்பிடிப்பு இன்னும் படமாக்கப்படவே இல்லை என்று மன்சூர்

கேமிராமேனிடம் கோபமாக நடந்து கொண்ட காவ்யா மாறன்.. என்ன நடந்தது பஞ்சாப்-ஐதராபாத் போட்டியில்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று 14வது போட்டியாக பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இது டப்பிங்கா? இல்ல ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பா? அருண் விஜய்யின் ஆக்ரோஷமான வீடியோ..!

அருண் விஜய் நடித்து முடித்துள்ள 'மிஷன் 1' என்ற திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அருண் விஜய் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி

அடுத்த லெவலுக்கு சென்ற அமீர் - பாவனி .. வைரல் புகைப்படங்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக மாறிய அமீர் மற்றும் பாவனி தற்போது இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.