கமல்ஹாசன் முதல் மனைவி வாணி கணபதியா இவர்? சுஹாசினி பகிர்ந்த அழகிய புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி கலந்து கொண்டதை எடுத்து நடிகை சுகாசினி, நடிகை லிசி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் அவருடன் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பாலிவுட் திரை உலகின் நடிகையான வாணி கணபதி கடந்த 1978 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசனை மணந்து கொண்டார். இவர் கமல்ஹாசனுடன் ’மேல்நாட்டு மருமகள்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமல்ஹாசன் - வாணி கணபதி ஆகிய இருவரும் கடந்த 1988 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். விவாகரத்துக்கு பின் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த வாணி கணபதி சமீபத்தில் நடந்த அம்ரிஷ் - சுமலதா தம்பதியின் மகன் திருமணம் பெங்களூரில் நடந்த நிலையில் அதில் அவர் கலந்து கொண்டார்.
இந்த திருமணத்தில் சுகாசினி, லிசி, ராதிகா, மேனகா, அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதியா இவர்? என்று ஆச்சரியத்தில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com