கமல்ஹாசனின் முதல் அரசியல் போராட்ட தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் மதுரையில் கட்சி ஆரம்ப பொதுக்கூட்டம், பின்னர் சென்னையில் மகளிர் தின பொதுக்கூட்டம் ஆகிய இரண்டு கூட்டங்களை முடித்துவிட்டார். மேலும் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியிலும் ஒரு பிரமாண்ட கூட்டத்தை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் முதல் அரசியல் போராட்டம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது

இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி தூத்துக்குடி மக்களுடன் இணைந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுவே அவர் அரசியலில் குதித்த பின்னர் அறிவிக்கும் முதல் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காவிரி மேலாண்மை விஷயத்திற்காக தற்கொலை செய்து கொள்வதாக கூறுவது பித்தலாட்டத்தனம் என்றும், தற்கொலை எல்லாம் அவசியமில்லை பதவியை ராஜினாமா செய்து அழுத்தம் கொடுத்தாலே போதுமானது என்று கமல் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ரஜினியின் டுவீட் வரவேற்கத்தக்கது என்றும், அதனை தான் ஆதரிப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

More News

விமான விபத்தில் உயிர் தப்பிய பிரபல நடிகை

கடந்த 1990கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. ரஜினியுடன் உழைப்பாளி, வீரா போன்ற படங்களிலும் மற்றும் பால் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடிகை ரோஜா ஜோடியாக நடித்துள்ளார்.

தோனியும் அஸ்வினும்: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்யும் காணொளி

தல தோனி ஒரு மேட்ச் ஃபினிஷர் என்பதும் தோல்வி அடையும் நிலையில் இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் பதட்டமின்றி விளையாடி அணியை வெற்றி பாதைக்கு பலமுறை கொண்டு சென்றுள்ளார்

இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை கொலை செய்த மனைவி: கள்ளக்காதலனும் உடந்தை

தர்மபுரி அருகே ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக கட்டிய கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ரஜினியின் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் விடுத்த 6 வார கால இன்று முடிவடையும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட வார்னர்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.