'களத்தூர் கண்ணம்மா' படத்தின் இணை தயாரிப்பாளர் இவர் தான்: கமல்ஹாசன் இரங்கல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் காலமானதை அடுத்து அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் தயாரிப்பாளர் ஏவி மெய்யப்ப செட்டியாரின் மாப்பிள்ளை அருண் வீரப்பன். இவர் ’களத்தூர் கண்ணம்மா’ உட்பட பல திரைப்படங்களுக்கு இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தார். கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ’களத்தூர் கண்ணம்மா’ உள்பட ஏவிஎம் நிறுவனம் தயாரித்த பல படங்களில் இணை தயாரிப்பாளராகவும் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் ‘உன்னிடத்தில் நான்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த அருண் வீரப்பன் அவர்களுக்கு 90 வயது ஆகியுள்ள நிலையில் முதுமை காரணமாக நேற்று காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தனது முதல் படத்தின் இணை தயாரிப்பாளர் அருண் வீரப்பன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது:
ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன்.
நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்கு தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி.
ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 28, 2023
நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக… pic.twitter.com/xhjomG3PE3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout