பரமக்குடியில் குவிந்த கமல்ஹாசன் குடும்பத்தினர்

  • IndiaGlitz, [Thursday,November 07 2019]

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் பிறந்து வளர்ந்து சொந்த ஊரான பரமக்குடியில் அவருடைய தந்தை சிலை இன்று திறக்கப்படுகிறது. கமல்ஹாசன் தனது தந்தையின் சிலையை திறந்து வைக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பரமக்குடியில் குவிந்துள்ளனர்.

மும்பையில் தங்களது தாயாருடன் வசித்து வரும் கமல்ஹாசன் மகள்களான ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோர்களும் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்த அனைவரும் தற்போது பரமக்குடியில் உள்ளனர். அதேபோல் இயக்குனர் மணிரத்னம் மனைவியும் சாருஹாசன் மகளுமான சுஹாசினியும் பரமக்குடிக்கு வருகை தந்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் கமல்ஹாசன் குடும்பத்தினர் ஒரே இடத்தில் ஒரே நாளில் சந்திப்பதால் அக்குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று மாலை நடைபெறும் கமல்ஹாசனின் தந்தை சிலை திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 

More News

கமல், மோகன்லால், சல்மான்கான் பட்டியலில் இணைந்த மகேஷ்பாபு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் 'தர்பார்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

சரவணன் - மீனாட்சி போல் செல்பிக்கு முயற்சி: பரிதாபமாக பலியான இளம்பெண்

சென்னை ஆவடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தனது வருங்கால கணவருடன் பாழடைந்த விவசாய கிணறு ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற போது பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த தமிழ் திரைப்பட நடிகை!

பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும், சிம்பு நடிக்கவுள்ள 'மாநாடு' திரைப்படத்தை தயாரிக்கவிருப்பவருமான சுரேஷ் காமாட்சி இயக்கிய 'மிக மிக அவசரம்' என்ற திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

ரஜினியின் வீட்டுக்கு சென்ற பிரபல பாஜக பிரமுகர்! தமிழக அரசியலில் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதால் அவரை அவ்வப்போது பல்வேறு கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர்

19 வருடங்களுக்கு பின் வெளிவரும் கமல்ஹாசன் பட டிரைலர்!

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மிகச்சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தக் கொண்டாட்டத்தை கமல் ரசிகர்கள் இன்று முதலே உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்