பிரதீப்புக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுக்காதது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்..
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான பிரதீப் மீது மாயா, பூர்ணிமா உட்பட சில பெண் போட்டியாளர்கள் சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். பிரதீப்புக்கு இழைக்கப்பட்ட அநியாயம் இது என்று பல நெட்டிசன்கள் பொங்கி எழுந்தனர். அது மட்டும் இன்றி கமல்ஹாசனுக்கும் விமர்சனங்கள் இருந்தன
பிரதீப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்றும், அவர் விளக்கம் அளிக்க முன்வந்த போதிலும் கமல் அதை தடுத்து நீங்கள் உட்காருங்கள் என்று கூறியதை ஏற்க முடியாது என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய எபிசோடின் இறுதியில் இது குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியபோது, ‘ கிட்டத்தட்ட எல்லாருக்கும் விளக்கம் அளித்து விட்டதாக நான் நினைக்கின்றேன், ஒன்று மட்டும் எஞ்சி என்று இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதை உங்களிடம் மட்டும் சொன்னால் போதுமானது
அதாவது பிரதீப்புக்கு அவரது தரப்பை சொல்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டவில்லை என்று ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது. பிரதீப்புக்கு வாய்ப்பு கொடுத்தேன், அவருக்கு வாய்ப்பு கொடுத்த போதெல்லாம், தன்னுடைய தவறுக்கு வருந்துவதோ அல்லது காரணம் சொல்லாமல் மற்றவர்கள் செய்தது இதைவிட தப்பு என்று அவர் வேறு கோணத்தில் சென்றார்
இன்னொரு இடத்தில் அவர் தானே தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்வாரோ என்ற எனக்கு தோன்றியது. நான் இப்படித்தான் சார் பேசுவேன், இப்படித்தான் இருப்பேன் என்று தனக்கான குழியை ஆழமாக வெட்டிக் கொள்வார் என்று நான் நினைத்ததால் தான் போதும் என்று அவரை நிறுத்தினேன். ஆனால் அது அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான் என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விளக்கத்தை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Atlast Uruttu of the day by the man Himself #KamalHaasan Sir👎👎👎#BiggBossTamil7 #BiggBossTamil #BiggBoss7tamil #BiggBoss7#Pradeep #PradeepAntony pic.twitter.com/111EDIGmD5
— Leo 🦁 (@kollywood0) November 11, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments