பிரதீப்புக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுக்காதது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்..

  • IndiaGlitz, [Sunday,November 12 2023]

பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான பிரதீப் மீது மாயா, பூர்ணிமா உட்பட சில பெண் போட்டியாளர்கள் சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். பிரதீப்புக்கு இழைக்கப்பட்ட அநியாயம் இது என்று பல நெட்டிசன்கள் பொங்கி எழுந்தனர். அது மட்டும் இன்றி கமல்ஹாசனுக்கும் விமர்சனங்கள் இருந்தன

பிரதீப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்றும், அவர் விளக்கம் அளிக்க முன்வந்த போதிலும் கமல் அதை தடுத்து நீங்கள் உட்காருங்கள் என்று கூறியதை ஏற்க முடியாது என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடின் இறுதியில் இது குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியபோது, ‘ கிட்டத்தட்ட எல்லாருக்கும் விளக்கம் அளித்து விட்டதாக நான் நினைக்கின்றேன், ஒன்று மட்டும் எஞ்சி என்று இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதை உங்களிடம் மட்டும் சொன்னால் போதுமானது

அதாவது பிரதீப்புக்கு அவரது தரப்பை சொல்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டவில்லை என்று ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது. பிரதீப்புக்கு வாய்ப்பு கொடுத்தேன், அவருக்கு வாய்ப்பு கொடுத்த போதெல்லாம், தன்னுடைய தவறுக்கு வருந்துவதோ அல்லது காரணம் சொல்லாமல் மற்றவர்கள் செய்தது இதைவிட தப்பு என்று அவர் வேறு கோணத்தில் சென்றார்

இன்னொரு இடத்தில் அவர் தானே தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்வாரோ என்ற எனக்கு தோன்றியது. நான் இப்படித்தான் சார் பேசுவேன், இப்படித்தான் இருப்பேன் என்று தனக்கான குழியை ஆழமாக வெட்டிக் கொள்வார் என்று நான் நினைத்ததால் தான் போதும் என்று அவரை நிறுத்தினேன். ஆனால் அது அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விளக்கத்தை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

தீபாவளி வாழ்த்தில் 'வன்மம்' குறித்து பேசிய கமல்ஹாசன்: பிக்பாஸ் முதல் புரமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக பிரதீப் வெளியேற்றம் குறித்து மாயா, பூர்ணிமா குரூப் மற்றும் கமல்ஹாசன் மீது கடும் விமர்சனங்கள்

விக்னேஷ் சிவன் அடுத்த படத்தில் 3 பிரபல இயக்குனர்கள்.. 'லியோவுடன் கனெக்சன்..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அதை அடுத்து அவரது இயக்கத்தில் உருவாகும் படம் இன்னும் வெளியாகவில்லை.

ஜெயில்ல இருந்து வெளியில போறதை விட தப்புல இருந்து வெளியே போகணும்: 'சைரன்' டீசர்..

ஜெயம் ரவி நடித்த 'சைரன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

தீபாவளி வாழ்த்து சொன்ன கமல்.. அங்கேயும் விடாமல் துரத்தும் பிரதீப் பிரச்சனை..!

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' படத்தின் டீசர் வெளியீடு

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின்