இந்த ரெண்டு பேருக்கு மட்டும் புரிஞ்சா போதும்.. ஸ்ட்ரைக் காரணத்தை கூறிய கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Sunday,October 08 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் விஜய் வர்மாவுக்கு ஸ்ட்ரைக் அட்டையை கமல்ஹாசன் காண்பித்தார் என்பதும் இதே போன்ற மூன்று முறை ஸ்ட்ரைக் அட்டையை பெற்றவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோ வீடியோவில் மாயா ஸ்ட்ரைக் குறித்து தனது கருத்தை தெரிவிக்கிறார். விஜய்க்கு ஸ்ட்ரைக் கொடுத்தது சரியான முடிவு தான். ஆனால் அதேபோல் இன்னும் இரண்டு பேர் இந்த வீட்டில் இருக்கிறார்கள் என்று மாயா கூறுகிறார்

அப்போது விஜய்க்கு ஸ்ட்ரைக் ஏன் கொடுத்தேன் என்பதை விளக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறிய கமலஹாசன் ’ஒருத்தருடைய சோகத்தை பற்றி கிண்டல் அடித்து நீங்கள் பேசினீர்கள், என்ன அது என்று நீங்கள் கேட்டால் நான் சொல்ல மாட்டேன், அந்த அளவுக்கு அது கண்டனத்துக்குரிய ஒரு விஷயம்.

நான் என்ன சொல்கிறேன் என்று விஜய்க்கு புரியும், கூட நின்று பேசி சிரித்தவர்களுக்கும் புரியும், அந்த ரெண்டு பேருக்கும் மட்டும் புரிந்தால் போதும்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த சம்பவம் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் யோசித்து வருகின்றனர்.