இந்த ரெண்டு பேருக்கு மட்டும் புரிஞ்சா போதும்.. ஸ்ட்ரைக் காரணத்தை கூறிய கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Sunday,October 08 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் விஜய் வர்மாவுக்கு ஸ்ட்ரைக் அட்டையை கமல்ஹாசன் காண்பித்தார் என்பதும் இதே போன்ற மூன்று முறை ஸ்ட்ரைக் அட்டையை பெற்றவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோ வீடியோவில் மாயா ஸ்ட்ரைக் குறித்து தனது கருத்தை தெரிவிக்கிறார். விஜய்க்கு ஸ்ட்ரைக் கொடுத்தது சரியான முடிவு தான். ஆனால் அதேபோல் இன்னும் இரண்டு பேர் இந்த வீட்டில் இருக்கிறார்கள் என்று மாயா கூறுகிறார்

அப்போது விஜய்க்கு ஸ்ட்ரைக் ஏன் கொடுத்தேன் என்பதை விளக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறிய கமலஹாசன் ’ஒருத்தருடைய சோகத்தை பற்றி கிண்டல் அடித்து நீங்கள் பேசினீர்கள், என்ன அது என்று நீங்கள் கேட்டால் நான் சொல்ல மாட்டேன், அந்த அளவுக்கு அது கண்டனத்துக்குரிய ஒரு விஷயம்.

நான் என்ன சொல்கிறேன் என்று விஜய்க்கு புரியும், கூட நின்று பேசி சிரித்தவர்களுக்கும் புரியும், அந்த ரெண்டு பேருக்கும் மட்டும் புரிந்தால் போதும்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த சம்பவம் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் யோசித்து வருகின்றனர்.

More News

'லியோ' படத்தின் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா? அப்ப வசூல் எத்தனை கோடி இருக்கும்?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ் தகவல் வெளியாகி மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'விடாமுயற்சி' படப்பிடிப்பில் இருந்து த்ரிஷா வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் வைரல்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவும் கலந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

'லியோ' ரிலீசுக்கு 6 நாட்களுக்கு முன் ரிலீசாகும் பரத்-ரகுமான் திரைப்படம்.. போஸ்டர் வைரல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு 6 நாட்களுக்கு முன்னர் பரத் மற்றும் ரகுமான் இணைந்து நடித்த படத்தின் ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட் திரையுலகில் இதுதான் முதல் முறை.. 'தலைவர் 171' படம் குறித்து சூப்பர் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 171வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும்

அந்த நபரை சும்மா  விடக்கூடாது.. பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த ரம்யா கிருஷ்ணன்..!

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அந்த நபரை சும்மா விடக்கூடாது என நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.