பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்ஹாசன்: பார்வையாளர்களுக்கு ஏமாற்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரமாக சர்வாதிகாரி டாஸ்க்கால் ரணகளமாக பிக்பாஸ் வீடு இருந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் கமல்ஹாசன் சென்றது 'பிக்பாஸ் தமிழ்' வீட்டிற்கு இல்லை என்பதும், அவர் சென்றது 'தெலுங்கு பிக்பாஸ்' வீடு என்பதால் பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
சர்வாதிகாரி டாஸ்க்கால் சக போட்டியாளார்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் ஐஸ்வர்யாவின் அடாவடித்தனத்தால் வெறுப்படைந்த நிலையில் நாளை கமல்ஹாசன் இதற்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாலாஜி மீது குப்பை கொட்டிய விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமா? அல்லது குப்பை நல்லதுதான் என்று 'நம்மவர்' பட பாணியில் கமல் சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தெலுங்கு செட்டிற்குள் 'விஸ்வரூபம் 2' படத்தின் புரமோஷனுக்காக கமல்ஹாசன் சென்றார். அவரை போட்டியாளர்கள் அன்புடன் வரவேற்று அவரிடம் ஆசி பெற்றனர். தமிழ், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பயன்பட்டதோ இல்லையோ, விஸ்வரூபம் 2' படத்தின் புரமோஷனுக்கு நன்றாக பயன்படுகிறது என்பதே நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.
When a Legend like @ikamalhaasan walks into the Bigg Boss House..Celebration always multiplies #Vishwaroopam2 #BiggBossTelugu2 Today at 9:30 PM on @StarMaa pic.twitter.com/x1Ipwc7f3D
— STAR MAA (@StarMaa) August 3, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com