டாம் & ஜெர்ரியாக இருந்த விசித்ரா-தினேஷை ஒரே நிமிடத்தில் சேர்த்து வைத்த கமல்ஹாசன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
டாம் அண்ட் ஜெர்ரி போல் பிக் பாஸ் வீட்டில் தினந்தோறும் சண்டை போட்டுக் கொண்டிருந்த விசித்ரா மட்டும் தினேஷ் ஆகிய இருவரையும் கமல்ஹாசன் ஒரே நிமிடத்தில் ஒற்றுமையாக சேர்த்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினேஷ் மற்றும் விசித்ரா ஆகிய இருவரும் தொடர்ச்சியாக தினந்தோறும் சண்டை போட்டு வந்தனர் என்பதும், இருவரும் ஒற்றுமையாக ஒரு நாள் கூட இருந்ததாக தெரியவில்லை என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும். குறிப்பாக தினேஷ் விசித்ராவின் ஒவ்வொரு நடவடிக்கையும் குற்றம் சொல்ல அதற்கு பதிலடியாக விசித்ராவும் பேசி வந்தார்.
இந்த நிலையில் இருவரும் ஒரு நாள் கூட ஒற்றுமையாக இல்லாத நிலையில் கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியில் ஒரே நிமிடத்தில் இருவரையும் ஒற்றுமைப்படுத்தி விட்டார். ’உங்கள் இருவருக்கும் என்னதான் பிரச்சனை என்று கமல்ஹாசன் கேட்க அதற்கு விசித்ரா ’வேண்டுமென்றே அவர் என்னிடம் சண்டைக்கு வருகிறார், கடைசி நேரத்தில் இதுக்கு ஒரு முடிவு கட்டி விடுங்கள் என்று கூறினார்.
உடனே கமல்ஹாசன் ’கடைசி வாரத்தில் எதற்காக சண்டை போடுகிறீர்கள்? போய் விசித்ராவிடம் கை கொடுத்து நண்பராகி விடுங்கள்’ என சொல்ல உடனே தினேஷ் ’எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை’ என்று கூறி விசித்ராவுக்கு கை கொடுத்தார். இதனை அடுத்து இருவரது பிரச்சினை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
கிட்டத்தட்ட 50 நாட்களாக இருவரும் சண்டை போட்டுக் கொண்டு இருந்த நிலையில் ஒரே நிமிடத்தில் இருவரையும் கமல்ஹாசன் சேர்த்து வைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com