ஒரே படத்திற்கு 5 முறை டப்பிங் பேசிய கமல்ஹாசன்.. இப்படி ஒரு நடிகர் யாராவது உண்டா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் ஒரே படத்திற்கு ஐந்து முறை டப்பிங் பேசியதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து ’இப்படி ஒரு நடிகர் யாராவது உண்டா’ என கமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்பட பலர் நடித்த ’கல்கி 2898 ஏடி’ படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இதில் கமல்ஹாசனின் ஒரே ஒரு காட்சி மட்டும் இடம் பெற்றிருந்தது. ’எத்தனை யுகம் ஆனாலும் எத்தனை வாய்ப்பு கொடுத்தாலும், மனுஷன் மாறல, மாற தெரியாது’ என்ற வசனத்தை அவர் பேசிய நிலையில் இந்த வசனம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் 5 மொழிகளிலும் கமல்ஹாசனே தனது சொந்த குரலில் டப்பிங் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 5 மொழிகளிலும் இந்த வசனத்தை பேசிய கமல்ஹாசனின் வீடியோவை பதிவு செய்துள்ள கமல் ரசிகர்கள், இப்படி ஒரு நடிகர் இந்தியாவில் உண்டா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரும் தங்கள் தாய்மொழியில் மட்டுமே சொந்த குரலில் டப்பிங் கொடுத்த உள்ளனர் என்பதும் மற்ற மொழிகளில் வேறு நபர்களின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் கமல்ஹாசனின் குரல் மட்டுமே ஐந்து மொழிகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நிலையில் அவருக்கு ஐந்து மொழிகளும் அத்துபடி என்பதும் அதனால் தான் அவரால் மிக இயல்பாக இந்த ஐந்து மொழிகளிலும் தன்னுடைய கேரக்டருக்கு டப்பிங் செய்ய முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The Name is Kamal Haasan 🔥
— KamalHaasan - KamalismForever (@KamalismForever) June 22, 2024
He Himself Dubbed All Languages 💥 #GOAT @ikamalhaasan 🙏
•Tamil
•Telugu
•Hindi
•Malayalam
•Kannada #KALKI2898AD#KamalHaasan#KALKI2898ADOnJune27th pic.twitter.com/D5QfoeKigs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout