ரஜினி பள்ளியில் மகளை படிக்க வைத்த கமல் டிரைவர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கமல்ஹாசனிடம் சுமார் 12 வருடங்கள் டிரைவராக பணிபுரிந்த ஆனந்த் என்பவர் அளித்துள்ள பேட்டியில் கமல்ஹாசனின் குணம், கவுதமியிடம் அவர் காட்டிய அன்பு, தனக்கு செய்த உதவி உள்பட பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்
கமலிடம் வேலை பார்த்த அனுபவம் குறித்து ஆனந்த் கூறியபோது, 'நேர்மை, பொய் சொல்லாமல் இருந்தால் போது கமலிடம் வேலை பார்ப்பது ஈசி. சம்பளம், சாப்பாடு என்ற எந்த குறையையும் கமல் வைத்ததில்லை
கவுதமி மீது கமல் மிகுந்த பாசம் வைத்திருந்தார். அவர் உடல்நலமில்லாமல் இருந்தபோது தாய் போல் அவரை கவனித்து கொண்டவர் கமல்தான் என்று கமல்-கவுதமி குறித்து ஆனந்த் கூறியுள்ளார்.
மேலும் தனது மகளை ரஜினி நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளியில் தான் படிக்க வைத்ததாகவும், 1ஆம் வகுப்பில் இருந்து 11ஆம் வகுப்பு வரை தனது மகளின் பள்ளிக்கட்டணங்களை கமல் தான் கட்டியதாகவும் எத்தனை ஆயிரமாக இருந்தாலும் கேள்வியே கேட்காமல் தனது மகளுக்காக கமல் செக் கொடுத்ததாகவும் கூறினார்.
இந்த நிலையில் தற்போது பக்கவாதம் காரணமாக சொந்த ஊரில் சிகிச்சை பெறக்கூட வழியில்லாமல் இருக்கும் ஆனந்த் அவர்களுக்கு கமல் உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com