கமல்ஹாசனின் பாராட்டை பெற்ற டாக்டர்

  • IndiaGlitz, [Saturday,January 23 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'உன்னை போல் ஒருவன்' திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தாலும் அனைவரின் பாராட்டை பெற்றவர் டாக்டர் பரத். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது கமல்ஹாசனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.


டாக்டர் தொழிலை செய்து கொண்டே நடிப்பிலும் ஆர்வம் காட்டிய பரத், தற்போது 'பயமே ஒரு பயணம்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் ஸ்டில் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நட்பின் அடிப்படையில் கமல் கலந்து கொண்டு டாக்டர் பரத்துக்கு வாழ்த்து கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கமல் பேசியபோது, "டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர். ஆயினும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது. 'உன்னை போல் ஒருவன்' படத்தில் அவர் என்னுடன் இணைந்து நடித்திருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார். அவர் நடித்துள்ள 'பயம் ஒரு பயணம் ' படத்தின் ஒரு சில காட்சிகளை சமீபத்தில் பார்த்தேன். அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப்படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய 'பயம் ஒரு பயணம்' படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று வாழ்த்தினார்

நடிப்பில் பல்கலைக்கழகமாக இருக்கும் கமலிடம் இருந்தே பாராட்டு பெற்றுவிட்ட டாக்டர் பரத் பெரும் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் டாக்டர் பரத்துடன் விசாகாசிங், மீனாக்ஷி தீட்சித், ஊர்வசி மற்றும் சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிஷர்மா இயக்கியுள்ளார்.

More News

சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அஜித்

கடந்த தீபாவளி தினத்தில் ரிலீஸான 'வேதாளம்' படத்தை அடுத்து தல அஜித் தனக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து கொண்டிருந்த முழங்கால்...

இன்றுமுதல் ஆரம்பமாகிறது அஞ்சலியின் ஆக்சன் படம்

அஞ்சலி முதன்முதலாக ஆக்சன் நாயகியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது...

விஜய் படத்தின் டீசரை வெளியிடுகிறார் ஆர்யா

இளையதளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாடலாசிரியர் விஜய்..

விரைவில் ரிலீஸ் ஆகிறது ஜி.வி.பிரகாஷின் முதல்படம்

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகராக அறிமுகமான படம் 'பென்சில்'. ஆனால் இந்த படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட 'டார்லிங்'...

பிப்ரவரியில் முடிகிறது தனுஷின் அடுத்த படம்

தனுஷ் நடித்த 'தங்கமகன்' திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானதை அடுத்து அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'கொடி'...