தீபாவளி வாழ்த்து சொன்ன கமல்.. அங்கேயும் விடாமல் துரத்தும் பிரதீப் பிரச்சனை..!

  • IndiaGlitz, [Sunday,November 12 2023]

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் தனது சமூக வலைதளத்தில் தீபாவளி வாழ்த்து கூறி பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது.

விடிவானில் ஒளிர்மீன்கள்
விண்ணெல்லாம் ஒளிரட்டும்
ஐப்பசியின் மழைப்பொழிவில்
அகமெல்லாம் மலரட்டும்
ஆகாயம் பார்த்திருக்கும்
அருமைநிலம் செழிக்கட்டும்
தீபாவளி நாளில்
திசையெட்டும் பொலியட்டும்.

கமல்ஹாசனின் இந்த தீபாவளி வாழ்த்து பதிவிற்கு நெட்டிசன்கள் பிரதீப் குறித்து கமெண்ட்ஸ்களில் பதிவு செய்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கமல், பிரதீப்பை வெளியேற்றியது சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் பல குறும்படங்கள் போட்டார். ஆனால் ஒரே ஒரு குறும்படம் அவர் குற்றவாளி என்பதை நிரூபிக்கும் வகையில் பதிவு செய்யவில்லை.

குறிப்பாக ரவீனாவின் அரைஞாண் கயிறு விசயத்தில் பிரதீப் கூறியது என்ன? ஆனால் ரவீனா வெளிப்படுத்தியது என்ன?என்ற ஒரு குறும்படத்தையோ, பால்மேட்டர் குறித்து தன்னிடம் விளக்கம் கேட்க வந்த பூர்ணிமாவிடம் பிரதீப் சொன்னது என்ன? என்ற குறும்படங்களை போட்டு இருந்தால் பிரதீப் எவ்வளவு நியாயமானவர், பெண்களை எந்த அளவுக்கு மதிப்பவர் என்பது வெளியே தெரிந்திருக்கும்.

ஆனால் நேற்றைய எபிசோடு முழுக்க முழுக்க கமல் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காகவே பயன்படுத்தி விட்டார் என பிரதீப் பிரச்சனை குறித்து அவரது தீபாவளி வாழ்த்து பதிவிற்கு கமெண்ட்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

மாயா குரூப்பை அவர் ஓரளவு கண்டித்தாலும் அவர்கள் செய்த செயலுக்கு ஏற்ற கண்டிப்பு இல்லை என்பதே நேற்றைய எபிசோடை பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட்ஸில் பதிவு செய்யுங்கள்..