close
Choose your channels

கமல்ஹாசன் சிகிச்சை குறித்து மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிவிப்பு!

Thursday, November 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகனும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய வீட்டில் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததால் கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்றார். அப்போது வைக்கப்பட்ட பிளேட் ஒன்றை நீக்குவதற்காக சமீபத்தில் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் காலில் வைக்கப்பட்டிருந்த பிளேட்டை எடுக்க சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை கமலஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி இருப்பதாக மக்கள் நீதி மையத்தின் துணை தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:

நமது தலைவர் கமலஹாசன் அவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக முடிந்து மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப மருத்துவமனையில் இருந்து தமது இல்லம் திரும்புகிறார். மருத்துவமனை நிர்வாகத்திற்கும், சிறப்புடன் மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கும், உதவியாளர்களுக்கும், ஏனைய பணியாளர்களுக்கும், அத்துடன் நம்மவர் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதை அடுத்து விரைவில் அவர் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment