நீங்க நிம்மதியா இருக்கிங்களா? அப்ப இந்த வீடியோவை பார்க்காதீங்க: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் அரசியல் கட்சியை ஆரம்பித்து தற்போது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் தீவிர முயற்சியில் உள்ளார். இணையதளங்கள் மூலம் மிக எளிதில் அவரது கட்சியில் சேரும் வசதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ஆரம்பிக்கும்போதே நீங்கள் தமிழ்நாட்டில் நிம்மதி இருந்தால் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் கமல்ஹாசன் மேலும் கூறியிருப்பதாவது: வணக்கம். நீங்கள் தமிழ்நாட்டில் சந்தோஷமாக,
நிம்மதியாக இருக்கிறீர்கள் என்றால், இந்த வீடியோவை பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாட்டு நடப்பும், அரசியலும் நல்லபடியாக சென்றுக் கொண்டிருப்பதாக நீங்கள் நம்பினால் இந்த வீடியோ உங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல. புறப்படுங்க... என்று கூறிவிட்டு சில நொடிகள் தனது கைக்கடிகாரத்தை பார்க்கின்றார். பின்னர் மீண்டும் தொடர்ந்து பேசிய கமல், வாவ். இன்னும் நீங்க இங்கத்தான் இருக்கீங்களா.. அப்ப நீங்க நம்ம கட்சி. அங்க என்ன செய்றீங்க. களத்திற்கு வாங்க, Signup' என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த வித்தியாசமான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Sign up! #MakkalNeedhiMaiam #Maiam #JoinMNM https://t.co/yPfOjKkQAH
— Kamal Haasan (@ikamalhaasan) February 22, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com