தமிழில் மொழிபெயர்ப்பு.. புதிய முயற்சியை அறிவித்த கமல்ஹாசன்.. அனைத்தும் இலவசம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் ‘மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்’ நடத்துகிறது என கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஓரான் பாமுக், ஹருகி முரகாமி உள்ளிட்ட பல சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் திரு. ஜி.குப்புசாமி பயிற்றுவிக்கிறார்.
இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், தங்களது சுய விவரங்களுடன் kamalpanpattumaiyambooks@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், சொந்தமாக மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை அல்லது ஒரு சிறுகதையை அந்த மொழிபெயர்ப்பின் மூல வடிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.
பயிற்றுநரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்
தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் ‘மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்’ நடத்துகிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2024
ஓரான் பாமுக், ஹருகி முரகாமி உள்ளிட்ட பல சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் திரு. ஜி.குப்புசாமி பயிற்றுவிக்கிறார்.… pic.twitter.com/h4uCxGW0bf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com