உதயநிதி அமைச்சரானதால் கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு!
- IndiaGlitz, [Tuesday,December 20 2022]
உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதேபோல் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படம் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகி உள்ளதால் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்க இருக்கும் படத்தில் இருந்து உதயநிதி விலகியுள்ளார். இதனை அடுத்து கமல்ஹாசன் உதயநிதிக்கு பதிலாக மாற்று ஹீரோவை உறுதி செய்து விட்டதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 54-வது படத்தில் உதயநிதிக்கு பதிலாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருந்த நிலையில் மீண்டும் கமல்ஹாசனின் தயாரிப்பில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் இந்த படத்தை ’கிடாரி’ படத்தை இயக்கிய பிரசாந்த் முருகேசன் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.