மிஷ்கின் படத்தில் இணைகிறார் கமல்ஹாசன் மகள்.. 2 பேரும் சேர்ந்து என்ன பண்ண போறாங்க தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,July 17 2024]

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’பிசாசு 2’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும் இன்னும் இந்த படம் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ’ட்ரெயின்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நான்கு பாடல்கள் இருப்பதாகவும் அதில் ஒரு பாடலை மிஷ்கின் பாடியுள்ளதாகவும் தெரிகிறது. இவர் ஏற்கனவே ‘அஞ்சாதே’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணதாசன் காரைக்குடி’ உட்பட சில பாடல்களை பாடியுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் இன்னொரு பாடலை பாட ஸ்ருதிஹாசனுக்கு அவர் அழைப்பு கொடுத்ததாகவும் ஸ்ருதிஹாசனும் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு ஒரு பாடலை பாடி கொடுத்ததாகவும் தெரிகிறது.

இந்த படத்தின் டப்பிங் உட்பட தொழில்நுட்ப பணிகள் தொடங்கி விட்டதாகவும் ’பிசாசு 2’ படத்திற்கு முன்பே இந்த படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக முழுக்க முழுக்க ரயிலில் நடைபெறும் ஒரு டார்க் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் ‘ட்ரெயின்’ படத்தில் விஜய் சேதுபதி, ஐரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிரித்விராஜ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். மிஷ்கின் இசையமைத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

More News

'ஓர் மாம்பழ சீசனில்'.. 'பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த படம்.. பர்த்டே பேபி தான் ஹீரோ..!

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் பிரபல நடிகரின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும்

பிரம்மாண்டமாக நடைபெற்றது விஜய் நட்சத்திர கொண்டாட்டம்.. கலந்து கொண்டவர்கள் யார் யார்?

விஜய் நட்சத்திர கொண்டாட்டம் கடந்த வாரம் 14, 15 ஜூலை 2024, விருத்தாசலம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இதில் ஏராளமான ரசிகர்கள்

'சர்தார் 2' படப்பிடிப்பில் உயிரிழப்பு..!

கார்த்தி நடித்து வரும் 'சர்தார் 2'படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்ததாகவும் இந்த விபத்தில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த போது

ரிஷப ராசிக்கு வரப்போகும் தன லாபம்..! ஆடி முதல் பங்குனி வரை ஜோதிட பலன்கள் | Prakash Narasimhan

ரிஷப ராசி நேயர்களுக்கு நிதி நிலை:

மேஷ ராசிக்கு லாபம் கொட்டுமா.? ஆடி முதல் பங்குனி வரை ஜோதிட பலன்கள் | Prakash Narasimhan

வேத ஜோதிட கலை நிபுணர் திரு. பிரகாஷ் நரசிம்ஹன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூ சேனலில் அளித்திருக்கும் இந்த காணொளியில்,