பிரகாஷ்ராஜ் முடிவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் பிரகாஷ்ராஜ் வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். பாஜக வேட்பாளரை இந்த தொகுதியில் வீழ்த்துவதே தனது நோக்கம் என்று களத்தில் இறங்கியிருகுக்ம் பிரகாஷ்ராஜூக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தர முன்வந்துள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட பிரகாஷ்ராஜ் எடுத்த முடிவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'எனது நண்பர் பிரகாஷ்ராஜின் அரசியல் பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பேச்சை செயலாக்கி காட்டியதற்கு நன்றி என பதிவு செய்துள்ளர்.
பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் இணைத்து கொள்ள காங்கிரஸ் உள்பட ஒருசில கட்சிகள் முயற்சி செய்தும் அவர் சுயேட்சையாக போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments