close
Choose your channels

கமலுக்கு சாவித்திரியின் பாராட்டும், சாவித்திரிக்கு கமலின் பாராட்டும்

Saturday, May 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக சாவித்திரி நடித்த 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தில் அறிமுகமானார் என்பதும், முதல் படத்திலேயே சிறப்பாக நடித்ததற்காக நடிகை சாவித்திரியிடம் அப்போதைய குழந்தை நட்சத்திரமான கமல்ஹாசன் பாராட்டு பெற்றார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று வெளியான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'நடிகையர் திலகம்' படத்தில் சாவித்திரி கேரக்டரில் நடித்த கீர்த்தி சுரேஷூக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கீர்த்திசுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'கமல்ஹாசன் அவர்களிடம் பாராட்டும், ஆசிர்வாதமும் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன். அவருக்கு எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி உள்பட பல தெலுங்கு, தமிழ் பிரபலங்கள், சாவித்திரி கேரக்டரில் தத்ரூபமாக நடித்த கீர்த்திசுரேஷை பாராட்டியுள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனும் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளது அவரது உழைப்புக்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment