பிரபல அரசியல் தலைவருக்கு கமல் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருமனதாக சற்றுமுன்னர் ராகுல்காந்தி பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பல அரசியல் தலைவர்கள் ராகுல்காந்திக்கு சமூக வலலத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் பதவி உங்களை வரையறுக்காது, ஆனால் அதே நேரத்தில் நீங்கள் உங்களது நிலையை வரையறுக்க முடியும். உங்கள் மூதாதையர் மீது நான் பெரும் மரியாதை வைத்துள்ளேன். அதேபோல் நீங்களும் நான் மதிக்கும் வகையில் உழைத்து அனைவரையும் நல்வழிப்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் தோள்களில் பலம் உண்டாக எனது வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு டுவிட்டர் பயனாளிகள் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments