ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்: கமலாவுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடன் அவர்களுக்கும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் ’அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் தனது வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அமெரிக்க துணை அதிபராக பதவி ஏற்க இருக்கும் முதல் இந்திய அமெரிக்க பெண் என்ற முறையில் ஒவ்வொரு இந்தியருக்கும் கமலா ஹாரீஸ் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரது மூதாதையரின் ஊரான துளசேந்திரபுரம் வரலாற்றில் இடம் பிடித்து விட்டதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்
கமல்ஹாசனின் இந்த டுவிட்டர் பதிவு தற்போது பரவி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கமலாஹாரீஸ் அமெரிக்க துணை அதிபரானது போல், கமல்ஹாசன் தமிழக முதல்வராவார் என்று நெட்டிசன்கள் கமெண்ட்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.
Congratulations in order,US President elect @JoeBiden & Vice-President elect @KamalaHarris for their resounding triumph. As the first Indian-American to be elected as VP,she is an inspiration for every Indian. Thulasendrapuram,her ancestral village finds a place in world history.
— Kamal Haasan (@ikamalhaasan) November 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments