ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்: கமலாவுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

  • IndiaGlitz, [Sunday,November 08 2020]

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடன் அவர்களுக்கும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் ’அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் தனது வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அமெரிக்க துணை அதிபராக பதவி ஏற்க இருக்கும் முதல் இந்திய அமெரிக்க பெண் என்ற முறையில் ஒவ்வொரு இந்தியருக்கும் கமலா ஹாரீஸ் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரது மூதாதையரின் ஊரான துளசேந்திரபுரம் வரலாற்றில் இடம் பிடித்து விட்டதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்

கமல்ஹாசனின் இந்த டுவிட்டர் பதிவு தற்போது பரவி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கமலாஹாரீஸ் அமெரிக்க துணை அதிபரானது போல், கமல்ஹாசன் தமிழக முதல்வராவார் என்று நெட்டிசன்கள் கமெண்ட்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.

More News

அமெரிக்க தேர்தலும் மூக்குத்தி அம்மனும்: ஆர்ஜே பாலாஜியின் வித்தியாசமான விளம்பரம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றுள்ளார் என்பதும், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் அவர்களும் வெற்றி பெற்றார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

'ஈஸ்வரன்' படத்தின் அடுத்தகட்ட பணியையும் முடித்த சிம்பு!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பதையும் நேற்று முன்தினம் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்

பாலாஜிக்கு ரெட் கார்டா? இல்லையா? இரண்டாவது புரமோவில் தெரிந்த விடை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படுவது யார்? என்பது குறித்த காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளது. ஏற்கனவே அர்ச்சனா, ஆரி, சனம், பாலாஜி,

தீர்ந்தது குழப்பம்: எவிக்ட் ஆனது இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டதாக நேற்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்த நிலையில்,

பாலாஜிக்கு ரெட் கார்ட்: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ள நிலையில் நேற்று வரை வெளிவந்த செய்தியின்படி சுரேஷ் தான் குறைந்த வாக்குகள் பெற்று இருந்ததாகவும்