close
Choose your channels

பிரபல நடிகருக்கு ஆண் குழந்தை: கமல்ஹாசன் வாழ்த்து

Thursday, June 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகருக்கு ஆண் குழந்தை: கமல்ஹாசன் வாழ்த்து

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அவர்களுக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஜூனியர் என்.டி.ஆர் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஆண் குழந்தை பிறந்துள்ளதால் எனது குடும்பம் பெரிதாகியுள்ளது என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன், ஜூனியர் என்.டி.ஆருக்கு தனது சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்கள் குடும்பத்தில் இணைந்து இன்னொரு ஜெண்டில்மேனை வரவேற்கின்றோம். வாழ்த்துக்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2' படத்தின் தெலுங்கு டிரைலரை ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டிருந்தார் என்பதும் இந்த டிரைலர் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெரும் வரவேற்பினை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment