திட்டம் போடுவது மட்டுமின்றி செயல்படுத்தவும் செய்கிறார்: முதல்வருக்கு கமல்ஹாசன் பாராட்டு!

  • IndiaGlitz, [Saturday,February 06 2021]

திட்டம் போடுவது மட்டுமன்றி செயல்படுத்தவும் செய்கிறார் என உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பாராட்டு தெரிவித்தது தமிழக முதல்வருக்கு அல்ல என்பதும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அதிரடி நடவடிக்கைகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலை முற்றிலும் பாதுகாக்கும் வகையில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சற்று முன் உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் இதுகுறித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

அரசுப் பயன்பாட்டுக்கான கார்களை மின்வாகனங்களாக 6 மாதங்களுக்குள் மாற்றுகிறார் என் நண்பரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால். மாசுக்கட்டுப்பாட்டுக்கான முக்கிய யுக்தியாக ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை முன்வைத்திருக்கிறார். மின்வாகனப் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றும் முனைப்பில் மின் வாகனம் வாங்குவோருக்கு மானியங்களை அறிவித்திருக்கிறார். திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டார். 

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்’ என்று கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார். இந்த டுவிட்டுக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

மின்வாகனப் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றும் முனைப்பில் மின் வாகனம் வாங்குவோருக்கு மானியங்களை அறிவித்திருக்கிறார். திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டார்.

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள். (2/2)

— Kamal Haasan (@ikamalhaasan) February 6, 2021