ஆர்யாவுக்கு கிடைத்த ஆஸ்காருக்கு இணையான பரிசு: வைரலாகும் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் ’சார்பாட்டா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது. இந்த புகைப்படத்தில் ஆர்யாவின் தோற்றம் மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது என்பதும், ஒட்டுமொத்த திரையுலகினரும் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஆர்யாவின் பிறந்தநாளை அடுத்து அவர் ஆசி வாங்குவதற்காக உலகநாயகன் கமலஹாசன் அவர்களை சமீபத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ’சார்பாட்டா’ திரைப்படத்திற்காக ஆர்யாவின் கடினமான உழைப்பை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். ஒரு படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் கேரக்டராகவே மாறி விடும் கமல்ஹாசன் அவர்களிடம் இருந்து கிடைத்த வாழ்த்து ஆஸ்கார் பரிசு இணையானதாக கருதப்படுகிறது
இதைவிட தனது வேறு மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு எனக்கு இல்லை என்றும் ’சார்பாட்டா’ படத்தை பார்த்த கமல்ஹாசன் அவர்களிடம் பாராட்டுப் பெற்றது மிகப்பெரிய பாக்கியம் என்றும் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் கூறி உள்ளார். கமலஹாசனை ஆர்யா சந்தித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன
Can’t ask for a better birthday gift. Truly overwhelmed humbled by ur love for #SarpattaParambarai @ikamalhaasan sir ???????? It’s been de best day in my life showing u my work in #Sarpatta Tks a million for sharing ur thoughts.. still learning from u everyday #Mahendran sir ???? pic.twitter.com/U9EToIv6yf
— Arya (@arya_offl) December 9, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com