தினேஷ்-ரக்சிதா குறித்து விசித்ராவின் பேச்சு.. தனது பாணியில் கண்டித்த கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Sunday,December 31 2023]

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் தினேஷ் மற்றும் ரக்சிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விசித்ரா பேசியதை கமல்ஹாசன் தனது பாணியில் கண்டித்து உள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் விசித்ரா பாத்திரம் விலக்கிக் கொண்டிருந்தபோது அவர் தினேஷ் மற்றும் ரக்சிதா திருமண வாழ்க்கை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரோடு எந்த பெண்ணும் குடித்தனம் பண்ண மாட்டார்கள் என்றும் ஒரு சில நாட்களில் ஓடி போய்விடுவார்கள் என்றும் ரக்சிதா நீ மீண்டும் திரும்பி வந்து விடாதே என்றும் அவர் பேசியது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோவில் கமல்ஹாசன், விசித்ராவிடம் இது குறித்து பேசுகிறார். ’நீங்கள் தனியாக கேமராவுக்காக சில விஷயங்கள் பேசுகிறீர்கள்’ என்று கூறிய போது ’நானா’ என்ற ஆச்சரியமாக விசித்ரா கேட்கிறார். அப்போது ’ஆமாம்’ என்று கூறிய கமல்ஹாசன், இன்னொருவருடைய பர்சனல் வாழ்க்கை குறித்து பேசுவது அநாகரிகமானது என்று கூற அப்போதும் விசித்ரா புரியாத மாதிரி ’எதை நீங்கள் சொல்கிறீர்கள், நான் என்ன சொன்னேன், அது தவறாக போய்விட்டது’ என்று கேட்டார்.

அப்போது கமல்ஹாசன் ’நான் அதை மறுபடியும் சொல்லி இன்னொருவரை புண்படுத்த விரும்பவில்லை’ என்று கூறிய போது தான் விசித்ராவுக்கு புரிந்து ’ஆமாம் நான் பேசினேன்’ என்று கூறினார். அப்போது கமல்ஹாசன் ’நீங்கள் பேசியது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம், இன்னொருத்தரோட திருமண வாழ்க்கையில் நாம் கவுன்சிலிங் செய்ய முடியாது’ என்று அமைதியாக அதே நேரத்தில் அழுத்தமாக விசித்ராவை அவர் கண்டித்த விதம் பார்வையாளர்களை கவர்ந்தது.