சுப்ரீம் கோர்ட் போனாலும் விடமாட்டேன்: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Saturday,May 09 2020]
தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் சென்னை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டே நாட்களில் சுமார் 300 கோடி டாஸ்மாக் சரக்குகள் விற்பனை ஆகின என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றும் மேலும் உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்டதாகவும் கூறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்பட ஒருசில அமைப்புகள் பதிவு செய்த இந்த வழக்குகளின் அடிப்படையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டது
இந்த நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும் டாஸ்மாக் மூடப்பட்டதால் அரசின் வருமானம் பெருமளவு குறைந்துள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தனது மேல்முறையீடு மனுவில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்.
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம்
— Kamal Haasan (@ikamalhaasan) May 9, 2020
தமிழக அரசு.
எங்கும் வருவோம் உமைத் தடுக்க.
மக்கள் நீதியே வெல்லும்.