திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது: கமல்ஹாசன் ஆவேச டுவிட்

அதிமுகவிற்கும் திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என்றும் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்து விட்டு ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் அரசியலில் இணைந்த நாள் முதல் அவர் வலியுறுத்தி வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று கிராம சபை கூட்டம். கிராம சபை கூட்டம் என்பது கண்டிப்பாக ஒவ்வொரு முறையும் நடத்த வேண்டும் என்றும் அதன் மூலம் இயற்றப்படும் தீர்மானங்கள் மத்திய மாநில அரசுகளை சென்றடைந்து கிராமத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி, அக்டோபர் 2ஆம் தேதி உள்பட ஒருசில நாட்களில் இந்தியா முழுவதும் கிராமசபை கூட்டம் நடந்து வரும் நிலையில் அந்த கிராம சபைக் கூட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு தருபவர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன் என்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் கிராமசபை கூட்டம் குறித்து விரிவாக விளக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடைவிதித்து அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் ட்வீட்டில் பதிவுசெய்து இருப்பதாவது:

கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது.

More News

கமல் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கவில்லை: டெல்லி கணேஷ் பேட்டி!

கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தன்னுடைய திரைப்பட அனுபவங்கள்

விவாத நிகழ்ச்சியில் ஆபாச வார்த்தை பேசிய ஊடகவியலாளர்....! வலுக்கும் கண்டனம்.....!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில், விவாத நிகழ்ச்சியின் போது ஆபாச வார்த்தைகள் பேசிய ஊடகவியலாளருக்கு,

கொட்டிக்கிடக்கும் தங்கம்… “கோல்ட்மைன்“ பற்றி ஆராயும் நாசா விஞ்ஞானிகள்!

பூமியில் இருந்து 200 மில்லியன் தொலைவில் இருக்கும் “சைக்கி“ எனும் சிறுகோளில் கணக்கே இல்லாத அளவிற்கு தங்கம் நிறைந்து

பீஸ்ட் படப்பிடிப்பில் தல தோனி? நடிகர் விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த வைரல் புகைப்படம்!

கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தற்போது மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளது.

'வலிமை' அப்டேட், 'மாநாடு' அப்டேட்: டபுள் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு!

'வலிமை' அப்டேட் மற்றும் 'மாநாடு' அப்டேட் என இரண்டு அப்டேட்களின் தகவல்களை வெங்கட்பிரபு கூறியதை அடுத்து அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.